நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் கழக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொள்ளாச்சியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அவர் பேசியதாவது மாநில உரிமைகளை மீட்க தலைவர் அவர்களின் குரலை தமிழ்நாடு எங்கும் எதிரொலித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தொண்டாமுத்தூரில் நேற்றிரவு வாக்கு சேகரித்தார். சொல்லிக் கொள்ள சாதனைகள் ஏதுமின்றி 10 ஆண்டு காலத்தை வீணடித்து – மதத்தின் பெயரால் வாக்கு கேட்கும் பாசிச கூட்டத்தையும் – அவர்களின் ஏஜென்டுகளையும் விரட்டியடிக்க “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிப்போம் என உரையாற்றினார்.