முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் அழைத்ததால் தான் தேனி தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
“பா.ஜ.க.வினரும் சகோதரர்களே என கெஜ்ரிவால் கூறினார்”- சுனிதா கெஜ்ரிவால் பேட்டி!
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேனி, திருச்சி தொகுதிகளில் அ.ம.மு.க. போட்டியிடுகிறது. அதில் தேனி தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதியான திருச்சியில் செந்தில் நாதன் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சி அரங்கில் தாக்குதல்- 150 பேர் உயிரிழப்பு!
தேனி தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும், அ.தி.மு.க. சார்பில் நாராயணசாமியும், களம் காண்கின்றனர். திருச்சியில் தி.மு.க. கூட்டணியில் துரை வைகோவும், அ.தி.மு.க. சார்பில் கருப்பையாவும் போட்டியிடுகின்றனர்.