குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 37வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளன. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி இந்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம் கடந்த போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக குஜராத் அணி பந்துவீசவுள்ளது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரணும் பிரப்சிம்ரன் சிங்கும் களமிறங்கவுள்ளனர்.