ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது குஜராத் அணி.
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது, பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?
மும்பை அணி தரப்பில் பிரீவிஸ் 46 ரன்களையும்,ரோஹித் சர்மா 43 ரன்களையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் சுதர்சன் 45 ரன்களையும், சுப்மன் கில் 31 ரன்களையும், ஜான்சன், ஒமர்சாய் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 6வது போட்டியில் பெங்களூரு- பஞ்சாப் அணிகள் இன்று (மார்ச் 25) இரவு 07.30மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னையிடம் வீழ்த்த பெங்களூரு சொந்த மண்ணில் வெற்றியைத் தொடங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.