தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்ககூடும் என என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் முதல் 01.05.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28.04.2024 முதல் 01.05.2024 வரை தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும் என என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்ககூடும் என என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இன்று (ஏப்ரல் 28), மே 2,3,4 ஆகிய 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.