நீண்ட இழுபறிக்கு பின் நெல்லை தொகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அறிவித்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.
“அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஐந்து மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, நெல்லை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார். அதேபோல், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பங்குனி உத்திரம் திருவிழா’- வேட்பு மனுவைத் தாக்கல் செய்த நட்சத்திர வேட்பாளர்கள்!
மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் என மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “சாமானியர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளோம்; நாடு முழுவதும் வேட்பாளர்களை காங்கிரஸ் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.