நீலகிரி மாவட்டத்தில் வடமாநில பெண்ணிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்த போது, அந்த பெண் கதறி அழுதார்.
குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் காரை சோதனையிட்ட போது, ரூபாய் 69,000 ரொக்கம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது, தங்களின் செலவுக்கு வேறு பணம் எதுவும் இல்லை என்றும், பணத்தைத் திரும்பத் தருமாறும் கூறி அந்த பெண் கதறி அழுதார்.
செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!
இதனிடையே சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தைப் பறிமுதல் செய்தது தொடர்பாக, சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.