கோவை உட்பட 19 மாவட்டங்களுக்கு இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்றும் , நாளையும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ,தர்மபுரி ,கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல், ஈரோடு, நீலகிரி ,கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் ,திண்டுக்கல், திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் கொடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.