இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, டி20 கிரிக்கெட் போட்டியில் 100 அரைசதங்களை அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
பங்குனி உத்திர விழா திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கோலாகலம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 77 ரன்கள் சேர்த்ததன் மூலமாக அந்த சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். 378 டி20 போட்டிகளில் களமிறங்கி 12,092 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி, 8 சதம் மற்றும் 92 அரை சதங்களை அடித்துள்ளார்.
காவல்துறை அதிகாரியிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் துரைமுருகன்!
டி20 போட்டிகளில் அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் கெயில் 110 அரை சதங்களை அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 109 அரை சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.