தேனி மாவட்டத்தை சேர்ந்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் கைது செய்த சவுக்கு சங்கரை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவை அழைத்துச் சென்றனர். யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்தும் இவர் அவதூறாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதன் அடிப்படையில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து, கோவை அழைத்து சென்றனர்.