தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை நடத்த முடிவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
புதிய சாதனை படைத்த விராட் கோலி!
சென்னையில் நடந்த தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “தேசிய சராசரியை விட தமிழகத்தில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்; 27 லட்சம் புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை நடத்த முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சாலையில் பழுதாகி நின்ற டிராக்டர் மீது மோதிய அரசுப் பேருந்து!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.