ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 834 பேர் வேட்பு மனுத்தாக்கல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (மார்ச் 27) மாலை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பொதுச்சின்னம் பட்டியலில் பம்பரத்தை ஒதுக்க முடியாது” என்று வாதிட, ம.தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக வாதிட்டார்.
பானைச் சின்னம் கேட்டு வி.சி.க. வழக்கு!
இதற்கு விளக்கம் அளித்த இந்திய தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், “ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் அதிகமான தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” என்றனர்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வழக்கில் தீர்வு காண இயலாது எனக் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.