100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹரியானா, சிக்கிம் மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்ட ஊதியமாக ரூபாய் 374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூபாய் 294 வழங்கப்பட்டு வருகிறது. அது தற்போது ரூபாய் 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.