சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம், பெரம்பூர் ,சேலம், ஈரோடு, ஊட்டி மற்றும் தர்மபுரி ஆகிய ரயில் நிலையங்களில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக ரயில்வே போலீஸ் தலைமையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யபட்டு நடத்தபட்டுள்ளது.
சென்னை ரயில் நிலையத்தில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் பொது மக்களை அழைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில் நிலையத்தில் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எழுதி வைக்கப்பட்ட பேனருக்கு கீழ் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் இராயில்வே போலீஸரால் நடத்தப்பட்டுள்ளது.
சேலத்தில் பள்ளி மாணவர்கள் 200 பேர் முன்னிலையில் போதை பொருளுக்கு எதிராக பேரணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.