கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணியில் வெளியான மெய்யழகன் திரைப்படத்திலிருந்து 18 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜப்பான் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் தான் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, இளவரசு போன்றோரும் நடித்திருந்தனர்.
இதனை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். சூர்யாவின் 2D நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்திருந்தார். மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார்.நல்ல ஒரு பீல் குட் படமாக உருவாகியிருந்த இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் இந்த படம் பல்வேறு தரப்பினரிடையை பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அதன்படி நாளுக்கு நாள் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் வசூலும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் நீளத்தினை குறைத்திருந்தால் படம் இன்னும் அருமையாக வந்திருக்கும் எனவும் படத்தின் நீளம் தான் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது எனவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
எனவே படத்திலிருந்து 18 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகையினால் இனிவரும் நாட்களில் மெய்யழகன் திரைப்படத்தை காண ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக படை எடுத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.