நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97 வது பிறந்தநாள் (அக்டோபர் 1)
இன்று. 1950 காலகட்டங்களில் இருந்து திரைத்துறையில் நடிக்க தொடங்கியவர் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் . இவர் நடிப்புக்கே தனி ஒரு உதாரணமாக விளங்கியவர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிக் கொண்டவர். நடிப்புலகத்தில் மாபெரும் மன்னனாக விளங்கியவர். பராசக்தி, திருவிளையாடல், கந்தன் கருணை போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பினால் யாரும் பார்த்திராத கடவுள்களை கண் முன் காட்டி இருப்பார் சிவாஜி.
அந்த வகையில் திரைத்துறையில் நடிகர் திலகம் என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது. பத்மபூஷன், பத்மஸ்ரீ, செவாலியர் விருது, கலைமாமணி விருது என பல விருதுகள் இவரால் பெருமை அடைந்தன.இத்தகைய பெருமைகளை உடைய சிவாஜி கணேசன் நம்மை விட்டு மறைந்தாலும் அவருடைய அசர வைக்கும் நடிப்பு மக்கள் மனதில் என்றும் மறையாமல் இருந்து வருகிறது.
3D தொழில்நுட்பத்தில் பணிகள் தீவிரம் சூர்யா நடிக்கும் – ‘கங்குவா’
இந்நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “காலங்கள் மாறலாம். தொழில்நுட்பங்கள் கூடலாம். சினிமாவின் முகமே மாற்றத்திற்கு இலக்காகி இருக்கலாம். ஆனால் நடிப்பு கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்க முடியாதது.
பிரமிக்க வைக்கும் சாதனைகளை செய்து காட்டியவரை பிறகு அவரது பிறந்த நாளில் வணங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன், சிவாஜி கணேசனுடன் இணைந்து பார்த்தால் பசி தீரும், நாம் பிறந்த மண், சத்யம், தேவர் மகன் உள்ளிட்டம் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.