பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது.
தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு!
பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 20 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 9 மக்களவைத் தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.எம்.எல். கட்சிக்கு 3 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை உத்தரவு
தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை ஆர்.ஜெ.டி., காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பாட்னாவில் கூட்டாக அறிவித்தனர். பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.