கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் சுமார் 1.15 கோடி பெண்கள் பயன் பெறுவதாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு!
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி., பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரும், எம்.பி.யுமான கனிமொழி, “தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.15 கோடி பெண்கள் பயன் பெறுகின்றனர். தமிழ்நாடு அரசின் திட்டத்தால் பொதுமக்கள் பயன்பெறும் போது எப்படி அது பெயரளவில் உள்ளது என்று கூற முடியும்? காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைந்துள்ளது.
தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு!
குஜராத் துறைமுகத்தில் பல லட்சம் கோடி போதைப் பொருட்கள் சிக்கியது. வெற்றி பெறுவேன் என்று அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை, ஆனால் வெற்றி பெறுவது நாங்கள் தான். முதலமைச்சரின் திட்டங்களை நம்பி தான் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது தி.மு.க” எனத் தெரிவித்துள்ளார்.