17வது ஐபிஎல் சீசனில் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி.
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், நேற்று நடைபெற்ற 11வது லீக் போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியானது நேற்று இரவு லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பந்து வீசவுள்ளது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 15 ரன்னிலும் குயின்டன் டிகாக் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய படிக்கல் 9 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் குருணால் பாண்டியா 23 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி அணியை 199 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் லக்னோ அணியானது 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 70 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோ 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பிரசிப்ரன் சிங் 19 ரன்னிலும், லியாம் லிவிங்க்ஸ்டன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக ஷிகர் தவான் 70 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.