திருப்பூரில் பணியாற்றி வரும் பிற மாவட்ட மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று தங்கள் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் . ரயில் நிலையத்தில் கூட்டம் குவிந்து வருகிறது
பின்னலாடை நகர் ஆன திருப்பூரில் அதிக அளவிலான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அதிக அளவிலான தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 90% போனஸ் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது திருப்பூரில் பணியாற்றி வரும் பிற மாவட்ட மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று தங்கள் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் குவிந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தன்பாத், பரவுனி, ஹுப்ளி, கொல்லம், சென்னை, பாட்னா உள்ளிட்ட 9 சிறப்பு ரயில்கள் திருப்பூர் மார்க்கமாக இயக்கப்பட்டதன் காரணமாக கூட்ட நெரிசல் சற்று தணிந்து காணப்படுகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
20 சதவிகிதம் போனஸ் அறிவித்த முதல்வா் – நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்.