பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பின்னர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் விக்னேஷ் சிவனின் எல்ஐசி திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். எல்ஐசி படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதே சமயம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதன் மூலம் அவர் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பிரேமம் பட ஹீரோ …..வெளியான புதிய தகவல்!
அதைத்தொடர்ந்து கயடு லோகர் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் விஜய் சித்து அன்பு என்ற கதாபாத்திரத்திலும் ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மிஸ்கின் மயில்வாகனன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கௌதம் வாசுதேவ் மேனன் வேல் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. அத்துடன் கே எஸ் ரவிக்குமார், பரசுராம் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஜார்ஜ் மரியான் தனபால் எனும் கதாபாத்திரத்திலும், இந்துமதி சித்ரா எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிராகன் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.