கச்சத்தீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை – எழிலன் நாகநாதன்
இலங்கையில் அதானியின் துறைமுகத்தை அமைப்பதற்கு மோடி வழி செய்கிறார். ஆனால் கடந்த 10 வருடங்களாக கச்சத்தீவை மீட்பதற்கு எள்ளளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தெரிவித்தார்.
ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி திமுக சார்பில் 117வது வட்டத்தில் மத்திய சென்னை திமுக வெற்றி வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் இளைய மகன் மு.க.தமிழரசு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை தி.நகர், சௌத்போக்சாலை, தாமஸ் சாலை, நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் தேங்காய்களை உடைத்து உற்சாக வரவேற்பு தந்தனர்.
https://www.mugavari.in/mivsrr-ipl-match-2/
இந்த வாக்கு சேகரிப்பு பணியில் மருத்துவர் அணி செயலாளர் நா. எழிலன் எம்.எல்.ஏ, பகுதி கழக செயலாளர் மா.பா.அன்புதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜ், ஆயிரம் விளக்கு தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் கலை கதிரவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராபர்ட், வட்ட செயலாளர் சத்திய பெருமாள் மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், மக்கள் எழுச்சி உடன் இருக்கின்றனர். இங்கு இருக்கக்கூடிய அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை சென்றுள்ளதுள்ளது என்றார்.
மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள். மோடி போன்ற பித்தலாட்ட ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகளில் நாட்டை சீரழித்து விட்டனர். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் தெளிவாக உள்ளனர்.
1974ஆம் ஆண்டு கச்சத்தீவு விவகாரம் குறித்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கச்சத்தீவு மீட்பை பற்றி பேசி வருகிறோம். இலங்கையில் அதானியின் துறைமுகத்தை அமைப்பதற்கு மோடி வழி செய்கிறார். ஆனால் கடந்த பத்து வருடங்களாக கச்சத்தீவை மீட்பதற்கு எள்ளளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
2024 திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் குலசேகரப்பட்டின லான்சிங் பேட் சுற்றி 150 கிலோமீட்டர் கச்சத்தீவு பகுதிகளில் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட இந்தியா கூட்டணி அமைந்த உடன் கச்சத்தீவை மீட்டெடுக்க திமுக முழுவீச்சுடன் களமிறங்கும் என்றார்.