திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி கூட்டம் சேர்த்து பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பி.அருணாசலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சுற்றுவட்டார பகுதியில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது, வெள்ளாலபாளையம் பிரிவு பகுதியில் அனுமதியின்றி பொதுமக்கள் கூட்டம் சேர்த்து அவர்களுக்கு உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளது.
https://www.mugavari.in/rcbvslsg-ipl-match-today/
இதையறிந்த தேர்தல் பறக்கும் படையினர் ஆப்பக்கூடல் போலீசில் புகார் அளித்தன் பேரில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அருணாசலம் மற்றும் உடன் வந்த அதிமுக-வினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.