தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பதை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!
தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தேர்தல் பத்திரங்கள்- அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ- க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கிய திருச்சி, தேனி, ஆரணி தொகுதிகளுக்கு பதில் வேறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.