பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி (வயது 48) மாரடைப்புக் காரணமாக காலமானார். நடிகர் டேனியல் பாலாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
“குடிமராமத்துப் பணிகளை செய்தது அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி பரப்புரை!
புரசைவாக்கத்தில் உள்ள வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் டேனியல் பாலாஜியின் செலுத்தினர். மாரடைப்பால் காலமான நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டன.
இன்று (மார்ச் 30) மாலை ஓட்டேரியில் உள்ள அரசு மின் மயானத்தில் டேனியல் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
“பா.ஜ.க.வுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.