டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது அம்மாநில உயர்நீதிமன்றம்.
ம.தி.மு.க. எம்.பி. மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21- ஆம் தேதி அன்று இரவு டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இதையடுத்து, அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து சிறையில் அடைத்தது.
சிறையில் இருந்தவாறு தனது அலுவலக பணிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கவனித்து வருகிறார். இந்த சூழலில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது, “அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆளுநர், குடியரசுத் தலைவர் தானே முடிவு செய்ய முடியும்? இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்?” என்று கேள்வி எழுப்பியதுடன், பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
‘ஜூலை 13- ல் குரூப் 1 தேர்வு நடைபெறும்’ என அறிவிப்பு!
இதனிடையே, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.