சட்டப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய சாதனை படைத்த விராட் கோலி!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 26) விசாரணைக்கு வந்த போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அங்கீகரிக்கப்படாத கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். சட்டப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் வழங்கப்படும். பம்பரச் சின்னம் ஒதுக்கக் கோரிய ம.தி.மு.க.வின் கோரிக்கை இன்றே பரிசீலிக்கப்படும். சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து தேர்தல் அதிகாரி தான் முடிவெடுப்பார்” என வாதிட்டார்.
“தமிழகத்தில் பிரச்சனையின்றித் தேர்தலை நடத்த முடிகிறது”- தலைமைத் தேர்தல் அதிகாரி பேச்சு!
இதனை பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதிகள் பம்பரம் பொதுச்சின்னத்திற்கான பட்டியலில் உள்ளதா என விளக்கம் அளிக்க ஆணையத்துக்கு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை இன்று (மார்ச் 26) பிற்பகல் 02.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.