இறைவனால் கொடையாகக் கொடுக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இன்றும் மக்கள் மனதில் வாழும் தலைவர்களாக உள்ளனர். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தே போய்விட்டார்கள்; அ.தி.மு.க. தலைவர்கள் நாட்டுக்காகப் பாடுப்பட்டனர். தி.மு.க. தலைவர்கள் வீட்டுக்காக பாடுபடுகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!
அ.தி.மு.க.வால் ஸ்டாலின், உதயநிதியின் தூக்கம் போய்விட்டது; மக்களின் துன்பத்தில் நின்றது ஆகும். இறைவனால் கொடையாகக் கொடுக்கப்பட்டவர் ஜெயலலிதா” எனத் தெரிவித்துள்ளார்.