திருச்சி மக்களவைத் தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அறிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
சென்னையில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., “வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. ஒதுக்கியுள்ள திருச்சி மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவார். ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் தந்தால் மகிழ்ச்சி; கிடைக்காவிட்டால் புதிய சின்னத்தில் போட்டியிடுவோம். திருச்சி மக்களவைத் தொகுதியில் ம.தி.மு.க. வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள்- அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ- க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட்ட நிலையில், இம்முறை திருச்சியில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.