தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
தெலங்கானா ஆளுநர் பதவியையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியையும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று (மார்ச் 18) திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். தமிழிசையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
இந்த சூழலில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியைக் கூடுதலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளது. அதில், இரு மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யும் வரை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்புகளைக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள்!
மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.