ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிரபல அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கத்திற்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
சுமார் 100- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேரை ரஷ்ய பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பழனி முருகன் கோயிலில் களைக்கட்டியுள்ள பங்குனி உத்திர திருவிழா!
இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்திருக்கும் ரஷ்ய அதிபர் புதின், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.