சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துகிறது. இதற்காக கடந்த 16ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்ட தேர்தலும் முடிவடைந்த பின்னர் ஜூன் 04ம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்பு அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிதம்பரம் நகரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம். பிரச்சாரமா? வெற்றி விழாவா ? என்று கேட்கிற வகையில் உற்சாகத்துடன் வருகை தந்து, பானை சின்னத்துக்கு வாக்களிப்போம் என்ற சிதம்பரம் மக்களுக்கு என் அன்பும் நன்றியும். கழகத்தின் கொள்கைப் பட்டறையாம் சிதம்பரத்தில் அண்ணன் திருமா பெறுகிற வெற்றி சமத்துவம் – சமூக நீதிக்கான வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.