துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்புடைய, 1.24 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
கடத்தல் தங்க பசை பார்சலை, விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு செல்ல முயன்ற, இலங்கையைச் சேர்ந்த டிரான்சிட் பயணியை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை. துபாயில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலைய வருகை பகுதியில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை, துபாயில் இருந்து, சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். குறிப்பாக அந்த விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் செல்லும் டிரான்சிட் பயணிகளை கவனமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த தனியார் பயணிகள் விமானத்தில் வந்துவிட்டு, இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் செல்ல இருந்த, இலங்கையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர் மீது, சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அந்த இலங்கை பயணி விமானத்திலிருந்து இறங்கி வந்து, டிரான்சிட் பயணிகள் இருக்கும் பகுதியில் வந்து அமர்ந்தார். அதன் பின்பு அவர், டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்கு சென்று விட்டு, நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தார். இதை ரகசியமாக கண்காணித்த சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த கழிவறைக்குள் சென்று பார்த்தனர். அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகள் அதை எடுத்துப் பிரித்துப் பார்த்த போது, பேஸ்ட் வடிவிலான தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதில் 1.24 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.90 லட்சம். இதை அடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள்,டிரான்சிட் பயணிகள் பகுதியில் இருந்த இலங்கை பயணியை, சுங்க அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். முதலில் இலங்கை பயணி மறுத்ததாகவும், அதன் பின்பு சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டார். அதோடு தான் கடத்தல் குருவி என்றும், கடத்தல் கும்பலிடம், கூலிக்காக வேலை செய்வதாகவும் கூறினார்.இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இலங்கை பயனியை கைது செய்தனர். அதோடு கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பசை பார்சலை, வெளியில் எடுத்து செல்ல இருந்து யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…