தவெக கட்சியில் நடிகர் தாடி பாலாஜி போன்ற பல நடிகர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் எனக்கு அழைப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஒரு வாக்காளர் என்ற முறையில் கலந்துக் கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அவருடைய கொள்கை என்ன என்பதனை, அவர் மக்களுக்கு என்ன கூற போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே மாநாட்டுக்கு செல்வேன் என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும். அவர் முதல் அடி எடுத்து வைக்கட்டும், அவர் என்ன செய்யப் போகிறார்?அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் கட்சியில் இணைவேனா என்பது குறித்து முடிவெடுக்க முடியும். தமிழக வெற்றி கழக கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ஆனாலும் அரசியலில் இறங்கி பணியாற்ற ஆர்வம் உள்ளவராகவே இருந்து வருகிறார்.
திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். நீண்ட காலமாக நடிகர் ராதாரவி, சரத்குமார் ஆதிக்கத்தில் இருந்த நடிகர் சங்கத்தை,சினிமா துறையில் முதன்முதலாக மாற்றத்தை ஏற்படுத்தியவர் விஷால். அதன் பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் களம் இறங்கி போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதிரடிக்கு பெயர்போன நடிகர் விஷால் தற்போது தவெக கட்சியில் இணைந்து அதன் வாயிலாக அரசியலில் இறங்கலாம் என்று கூறப்படுகிறது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…