டான் லுக்கில் அஜித்….. வைரலாகும் புகைப்படம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டான் லுக்கில் அஜித் வைரலாகும் புகைப்படம்!நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றகை தொடர்ந்து அஜித், விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தநிலையில். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சில புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது அஜித், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் ஸ்டைலிஷான டான் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என குறிப்பிட்டு அஜித்தின் இந்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் பலரும் குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
Video thumbnail
2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு - பாஜக | BJP | DMK
00:36
Video thumbnail
திமுகவை கண்டு மிரளும் பாஜக | DMK | MK Stalin | BJP | Modi
00:41
Video thumbnail
திமுகவை கண்டு மிரளும் பாஜக | திமுகவை தோற்கடிக்க முடியுமா? | DMK | MK Stalin | BJP | Modi | RSS
06:11
Video thumbnail
தமிழக பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் #BJP #AmitShah #nainarnagendran #mugavarinews
00:57
Video thumbnail
திமுக கட்சி பதவியில் இருந்து பொன்முடி நீக்கம் - ஸ்டாலின் அதிரடி #mkstalin #ponmudi #mugavarinews
00:52
Video thumbnail
ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடு சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம் #Governor #RNRavi #SupremeCourt
00:54
Video thumbnail
ஆளுநர் எதற்கு தேவை #tngovernorrnravi #governor #rnravi #mugavarinews
01:00
Video thumbnail
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்குமா #Neet #TNGovt #BanNeet
00:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img