தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர இருக்கிறது.
அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி ப்ரோமோஷன் நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி பிரதர் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து வருகிறார். அத்துடன் அவரிடம் நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் தானா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி, “நான் எப்போதும் பாசிட்டிவ்வான விஷயங்களை எடுத்துக் கொள்வேன். நெகட்டிவா இருக்கிறது எனக்கு பழக்கம் கிடையாது. நெகட்டிவான விஷயங்கள் இருந்தால் அந்த இடத்தை விட்டு சென்று விடுவேன். நெகட்டிவிட்டியை எங்கேயாவது பார்த்தாலும் கூட விலகி விடுவேன். சிறுவயதிலிருந்தே அது எனக்கு பிடிக்காது. அந்த ஒரு விஷயம் தான் என்னை நல்வழியில் நடத்திக் கொண்டு போகிறது.
இதைதான் நீங்கள் சந்தோஷ் சுப்பிரமணியம் என்று சொல்கிறீர்கள் என்றால் அப்போது அப்படித்தான் நான். இல்லையென்றால் இதில் உங்களுக்கு என்ன புரிந்ததோ அதுதான் நான்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் உருவாகியுள்ளன. அடுத்தது ஜெயம் ரவி, தனி ஒருவன் 2 போன்ற பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.