ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதேசமயம் கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ஹரிஷ் கல்யாணை வேறொரு பரிமாணத்தில் காட்டியது.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தது இவரது நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியாகி பார்க்கிங் திரைப்படத்தை போல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் டீசல், நூறு கோடி வானவில் போன்ற படங்கள் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் நிலையில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான அந்தகாரம் படத்தில் இயக்குனர் வி. விக்னராஜன் தான் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கப் போகிறாராம்.அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர் படமாக வெளியான அந்தகாரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், வி.விக்னராஜன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதன்படி இந்த படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படமானது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமன் படத்தைப் போல் காதல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறதாம். மேலும் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…