சினிமா

காந்தாரா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால்

காந்தாரா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால்

காந்தாரா இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் வரவேற்பை பெற்ற இப்படம் அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதன் மூலம் இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.

காந்தாரா வெற்றிக்கு பிறகு, காந்தாரா ஏ லெஜண்ட் (சாப்டர்1) என்ற பெயரில் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே இரண்டாம் பாகத்திற்கான முதல் தோற்ற வீடியோவை படக்குழு வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ததோடு இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என 7 மொழிகளில் தயாராக உள்ளதாகவும் அறிவித்தது.

மேலும் இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் மங்களூரில் காந்தாரா இரண்டாம் பாகத்திற்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. காந்தாரா இரண்டாம் பாகத்தில் 1970,80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்புகள் மே மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது. அதோடு காந்தாரா 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/class-12-exams-to-be-held-on-may-6-and-class-10-results-on-may-10/2302

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் காந்தாராவின் அடுத்த பாகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மோகன்லாலை ரிஷப் ஷெட்டி சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி