சினிமா

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (48) திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (48) திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி. இவர் நடிகர் முரளியின் சகோதரர் ஆவர். திரைப்பட கல்லூரியில் படித்த இவர் நடிகை ராதிகா நடித்த சித்தி, அலைகள் ஆகிய நாடகங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்னர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் நடித்த இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்தார். அப்படம் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்த இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து பைரவா, வடசென்னை, பிகில் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் ஆகாத இவர் திருவான்மையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த அவரது உடல் அவர் பிறந்து வளர்ந்த புரசைவாக்கம் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேனியல் பாலாஜியின் மரண செய்தியை அறிந்து நேரடியாக அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் புரோமேட் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் திரைத்துறை பிரபலங்கள் குறிப்பாக தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன், அமீர், வெற்றிமாறன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் போன்ற திரை பிரபலங்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.

டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.

மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி