சினிமா

‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட யூட்யூபர் டிடிஎஃப் வாசன்.

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கோவையை பூர்விகமாகக் கொண்டவர். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் சுற்றுலா சென்று தன்னுடைய பயணங்களை வீடியோவாக யூட்யூபில் பதிவிடுவார்.

அந்த வகையில் பல ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார் டிடிஎஃப் வாசன். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இவர் பல்வேறு வழக்குகளில் காவல்துறைக்கு சென்று வந்தவர். பலமுறை பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்துகளிலும் சிக்கி இருக்கிறார்.

இதற்கிடையில் தான் இவர், மஞ்சள் வீரன் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த படத்தினை செல்லம் என்பவர் எழுதி இயக்குகிறார். தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் செல்லலம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எனவே இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் டிடிஎஃப் வாசன் மற்றுமொரு புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsdesk

Recent Posts

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை