காட்டிற்குள் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர் உயிர் தப்பி திரும்பி வந்த நிகழ்வு கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. ஆசிரியையை துன்புறுத்தி புதைத்த ஆறு பேர் கைது.
கர்நாடக மாநிலம் சிக்பலாபூர் மாவட்டம் சித்திலகட்டா தாலுக்கா திட்பூரஹள்ளி என்ற கிராமத்தை 32 வயதான அர்ச்சனா என்ற பெண் யோகா ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். இவரிடம் பலர் தினம்தோறும் யோகா கற்று வந்தனர். இதில் குறிப்பாக பிந்து என்ற பெண் யோகா கற்றுக்கொள்ள அர்ச்சனாவிடம் சென்ற தனது கணவர் அவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகித்தார். இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை உறுதி செய்துகொள்ள பிந்து தனியார் துப்பறிவாளராக இருக்கும் தனது நண்பர் சதீஷ் ரெட்டியிடம் உதவி கேட்டுள்ளார்.
பிந்துவின் கோரிக்கையை ஏற்ற சதீஷ் யோகா ஆசிரியரின் வகுப்பில் இணைந்து யோகா கற்றுக் கொள்ள துவங்கியுள்ளார். சில நாட்களுக்கு பிறகு கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சதீஷ் யோகா ஆசிரியையிடம் அருகில் உள்ள வனப்பகுதியில் யோகா செய்ய அருமையான இடம் உள்ளது என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு சிக்பலாபூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூருவில் தொலைதூரத்தில் உள்ள தேவனஹள்ளி வனப்பகுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். வனப்பகுதிக்கு செல்லும் பாதி தூரத்தில் காரில் மேலும் நான்ககு ஆண்கள் இணைந்து கொண்டனர். வனப்பகுதிக்கு சென்றதும் அங்கு யோகா டீச்சரை சதீஷ் ரெட்டி (34), ரமணா (28), நாகேந்திரா ரெட்டி (35), ரவிச்சந்திரா (27) மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு இளைஞர் என ஐந்து பேரும் இணைந்து அவரது ஆடைகளை கிழித்து எரிந்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடித்து உதைத்து மிரட்டத் துவங்கியுள்ளனர்.
பிந்துவின் கணவருடன் மேலும் தொடர்பு வைத்த கொள்ள கூடாது என்று மிரட்டியது மட்டுமின்றி அவரை தாக்கி தாங்கள் கொண்டு சென்றிருந்த ஒரு கயிற்றைக் கொண்டு அவரின் கழுத்தை நெருக்கி கொலை செய்ய முயற்சித்தனர் அப்பொழுது தனது மூச்சை முழுவதுமாக உள்ளடக்கி உயிரிழந்தது போல் யோக ஆசிரியை நடித்துள்ளார். அவர் இறந்து விட்டதாக கருதிய கும்பல் அவரிடம் இருந்த அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு அவரை அருகில் இருந்த ஒரு சிறு குழியில் தள்ளி அதன் மேல் மண்களை கொட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். தன்னை கடத்தி வந்த கும்பல் அங்கிருந்து சென்ற பிறகு யோகா ஆசிரியை தான் புதைத்திருந்த இடத்தில் இருந்து வெளியேறி பக்கத்தில் இருந்த கிராமங்களுக்கு சென்று அங்கிருந்த நபர்களிடம் ஆடைகளை பெற்று உடுத்திக் கொண்டு பின்பு ஷிட்லகாட்டா அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டார் அப்பொழுது காவல்துறையினரிடம் அவர் புகார் அளித்த நிலையில் உடனடியாக வழக்கு பதிவு செய்த போலீசார் பிந்து உள்ளிட்ட ஆறு நபர்களையும் கைது செய்தனர். 18 வயதிற்குள் இளைஞனை மட்டும் சிறார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் ஐந்து குற்றவாளிகளையும் சிறையில் அடைத்தனர்.
ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஷூ பாலிஷ் போடும் பேராசிரியர்