க்ரைம்

60ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது

மதுரை  அண்ணாநகர் ஜக்காதோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார். இவர் மீது நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை  பிடித்து வழக்கு விசாரணைகளை முடிப்பதறகான நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை போலீசார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வசிப்பதாக தகவல் தெரியவந்தது  இதனையடுத்து மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதிசெய்தனர். இதைதொடர்ந்து சிவகாசியில் ஒயின் ஷாப் ஒன்றில்  பணிபுரிந்துவந்த பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

Newsdesk

Recent Posts

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…

நவம்பர் 20, 2024 9:59 காலை

அரசு பள்ளி விடுதி காப்பாளர் பணியிடங்கள் – அரசின் அறிவிப்பு

அரசு பள்ளி விடுதி காப்பாளர் பணியிடங்கள் அரசின் புதிய அறிவிப்பு தமிழகம் முழுவதும் 1300க்கும் அரசு பள்ளி விடுதிகள் உள்ளன.…

நவம்பர் 18, 2024 6:00 மணி

ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி – கைது

ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைக்க ₹ 25 லட்சம் லஞ்சம்…

நவம்பர் 18, 2024 10:46 காலை