க்ரைம்

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

திருப்பூர் மாநகராட்சி நல்லூரில் வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அருகே உள்ள நல்லூரில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர் மைதிலி. இவர் வாரிசு சான்றிதழ் பெற அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் ரூபாய் 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் நோட்டுகளில் ரசாயனப் பவுடர் தடவி கொடுத்து அனுப்பினர். பின்னர் இன்று நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து மைதிலி பணத்தை பெற்ற போது, அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக மைதிலையை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்தி வருகின்றனர்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி