க்ரைம்

ஆவடியில் சித்த மருத்துவ தம்பதியர் கழுத்தை அறுத்துக் கொலை

ஆவடியில் சித்த மருத்துவ தம்பதியர் கழுத்தை அறுத்துக் கொலை

ஆவடி அருகே சித்த மருத்துவ தம்பதியர் இருவர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

சென்னை ஆவடி அருகே மிட்டனமில்லி காந்திநகர் 2வது தெருவை சேர்ந்தவர்கள் சித்த மருத்துவர் சிவன் நாயர் (62), ஓய்வு பெற்ற மத்திய அரசு பள்ளி ஆசிரியர் பிரசன்னகுமாரி (55) தம்பதியர். இவர்களது மகள் வெளிநாட்டில் பயின்று வரும் நிலையில், சித்த மருத்துவர் சிவன் நாயர் தனது வீட்டிலேயே பொது மக்களுக்கு சித்தவைத்திய முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கூறி அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிவன் நாயரை சரமாரியாக தாக்கி விட்டு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். மேலும் அதனை தடுக்கமுயன்ற அவரது மனைவி பிரசன்ன குமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த முத்தாப்புதுப்பேட்டை போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர்கள் நேரில் வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/vaiko-statement-2/2226

இந்த இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுவதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற நிலையில் வீட்டிலிருந்த நகை பணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சம்பவ இடத்திற்கு டாபி என்கிற மோப்ப நாயும், தடயவியல் நிபுணர்களும் நேரில் வந்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். சினிமா கதையை மிஞ்சும் வகையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீசார் சரிவர ரோந்து செய்யாததே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடைத்துள்ளது. அது குற்றவாளியின் செல்போனாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி