தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் ஜவுளிக் கடைகள் நிறைந்த வண்ணாரப்பேட்டையில் மக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் தீபாவளித் திருநாளில் மக்கள் புத்தாடை அணிந்தும், தீபங்கள் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புப் பண்டங்கள் பரிமாறியும் கொண்டாடுவார்கள். இந்நிலையில் வரும் வியாழக்கிழமை 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் விடுமுறை தினமான இன்று புத்தாடைகள் வாங்க வண்ணாரப்பேட்டை ஜவுளி கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்
துணிக் கடைகளுக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். சென்னை புறநகர் பகுதிகளான மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வண்ணாரப்பேட்டை, எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் புத்தாடைகளை வாங்க குவிந்தனர்.துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் நடைபெற்று வருகின்றன இதனால்வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஜவுளிகள் எடுக்க அதிக வாடிக்கையாளர்கள் வண்ணாரப்பேட்டைக்கு வந்துள்ளனர் வண்ணாரப்பேட்டையில் ஜவுளிகள் மட்டுமல்லாமல் அணிகலன்களும் நகைக்கடைகளும் அலங்காரப் பொருட்களும் உள்ள நிலையில் ஏராளமானோர் ஒரே இடத்தில் புத்தாடைகளும் நகைகளையும் அணிகலன்களையும் வாங்கி செல்வதற்காக வண்ணாரப்பேட்டையில் அணிவகுத்து வருகின்றனர்