நமது தமிழக முதல்வர் சொல்வதையும் சொல்லாததையும் செய்து வருபவா். நமது முதல்வரின் நலத்திட்டங்களை பட்டியல் இடும் பொழுது திருபுகழை பாட பாட வாய் மணக்கும் என்பாா்கள் அதுபோலவே நமது முதல்வரின் மக்களின் நலன் கருதி செயல் படுத்தும் நலதிட்டங்களை செல்ல சொல்ல வாய் மணக்கும். என்று அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதத்தோடு பேசியுள்ளாா்.
ஆவடி மாநகராட்சியில் வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் செலவில் நியாய விலை கடை ஒன்றை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்ததோடு மக்களுக்கு எடை போட்டு பொருட்களையும் வினியோகம் செய்தாா். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர், திருபுகழை பாட பாட வாய் மணக்கும் என்பது போல் ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் அந்த அளவிற்கு தமிழக முதல்வர் சொன்னதையும் சொல்லாததையும் செய்து வருகின்றாா். ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையை 3 ரூபாயை குறைத்ததால் நாள் ஒன்றுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டிருந்தாலும் மக்களின் நலனை மனதில் வைத்து விலையை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. மகளிர் தங்களது பயணத்தை மேற்கொள்ள கடந்த மாதம் வரை 520 கோடி முறை இலவச பயணத்தில் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி – மக்களின் பயண்பாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
அதனால் 660 கோடி ரூபாய் வரை அரசுக்கு சுமை ஏற்பட்டாலும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் தமிழ்நாட்டின் முதல்வர் தான் என பெருமிதத்துடன் தெரிவித்தார். அதனைத் தொடரந்து, மாணவா்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும் காலை உணவுத்திட்டத்தையும் , கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய புதுமை பெண் திட்டத்தையும், மகளீர் உரிமைத் திட்டம் என்று எண்ணற்ற திட்டங்களையும் நடைமுறை படுத்தி செய்து வருகின்றவா் நமது முதல்வா் என்று அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதத்தோடு பேசியுள்ளாா்.