3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இந்த படத்தின் ட்ரெய்லர் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அடுத்தது இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் எனவும் இதன் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆகையினால் வருகின்ற அக்டோபர் 19 அல்லது 20ஆம் தேதி படத்திலிருந்து மிகப்பெரிய அப்டேட் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…