மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள கீழ் தளத்தில் கட்டுமான மறு சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது முழு கட்டிடம் இடிந்து விழுந்தது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் கேஇபி சாலையில் மூன்று மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது. இந்தக் கட்டிடம் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமானது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடத்தை அவர் கட்டியுள்ளார். மேலே உள்ள இரண்டு மாடிகளில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ள நிலையில் கீழ்தளத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் தங்கியுள்ளார். கீழ் தளத்தை புதுப்பிக்க கட்டுமான பணியில் கடந்த சில நாட்களாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொழுது தவறுதலாக கட்டிடத்தின் முக்கிய தூணை அவர்கள் இடித்த நிலையில் கட்டிடம் இடிந்து விழப் போகிறது என்பதை தீயணைப்பு படையினர் முன்கூட்டியே கணித்து உடனடியாக மூன்று மாடிகளில் இருந்த அனைத்து மக்களும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மூன்றுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் எதிரே இருந்த பள்ளி வளாகம் சேதமடைந்துள்ளது. தற்பொழுது கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு இடிபாடுகளை அகற்றும் பணியும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…