செய்திகள்

கல்வி தான் கடவுள் ‘சார்’ படத்தின் விமர்சனம்!

விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் திரைப்படம் இன்று (அக்டோபர் 18) வெளியாகி உள்ளது. இந்த படத்தை போஸ் வெங்கட் இயக்க கிராஸ் ரூட் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. மாங்கொல்லை எனும் ஊரில் 1960 முதல் 80 காலகட்டத்தில் நடைபெறும் கதையாக இந்த படம் நகர்கிறது. இதன்படி இந்த படத்தில் விமல் ஞானம் என்ற வாத்தியாராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தனது தாத்தா கட்டிய பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றி அங்குள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார் விமல். உயர் ஜாதியை சேர்ந்த தலைவரான ஜெயபாலன் அனைத்து மக்களுக்கும் கல்வி அறிவு கிடைத்துவிட்டால் நம்மால் அவர்களை அடிமையாக்க முடியாது என்ற நோக்கத்தில் தெய்வ நம்பிக்கையை புகுத்தி அந்தப் பள்ளிக்கூடத்தையே இடிக்க திட்டம் போடுகிறார். அந்தப் பள்ளிக்கூடத்தை இடிக்க விடாமல் போராடுகிறார் விமல். அந்தப் பள்ளிக்கூடத்தை இடிக்க விடாமல் தடுத்தாரா? அங்குள்ள மக்களுக்கு கல்வி கிடைத்ததா? என்பது படத்தின் மீதி கதை.

நடிகர் விமல் வாகை சூடவா படத்திற்கு பிறகு இந்த படத்தில் வாத்தியாராக நடித்திருக்கிறார். வழக்கம்போல் தனது நடிப்பினால் படத்தை தாங்கி பிடித்துள்ளார். விமலுக்கு ஜோடியாக சாயாதேவி கண்ணன் நடித்திருக்கும் நிலையில் தனக்கான கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். வில்லனாக வரும் ஜெயபாலன் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். படத்தின் முதல் பாதி நகைச்சுவை, காதல் என நகர்ந்து செல்கிறது. ஒரு சில இடங்களில் தேவையில்லாத காட்சிகள் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் சூடுபிடிக்க தொடங்கிய இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதாவது கல்வி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை கூறியுள்ளனர். கல்வியை பொறுத்தவரையில் மூடநம்பிக்கையை யார் திணித்தாலும் அவர்கள் சாமி இல்லை ஆசாமி தான் என்றும் கல்விதான் கடவுள் என்பதையும் அழகான திரைக்கதையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் இயக்குனர். சித்துக்குமாரின் இசை யும் இனியன் ஜெ ஹரிஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. முதல் பாதையில் சில தொய்வுகளை சரி செய்திருந்தால் படம் இன்னும் அருமையாக வந்திருக்கும். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் திரைப்படம் தான் சார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி