திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1200 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் 113 அடி நீர் நிரம்பிய நிலையில், சாத்தனூர் அணைக்கு வரும் 1200 கன அடி நீர் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதிகளை இணைக்கும் தென்பெண்ணை ஆற்று தரைப்பாலத்தில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் இதன் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.
எறும்புத்திண்ணியை விற்க முயன்ற கும்பல் – கைது செய்த வனத்துரையினா்.
எனவே திருக்கோவிலூர் தென்பனையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்குவும் குளிக்கவும் கூடாது என திருக்கோவிலூர் நகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்,